திருவள்ளூர் அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர்- ஷ்ரீபெரும்புதூர் இணைப்புச் சாலைப் பகுதியான போலிவாக்கத்தில் அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
நேற்று பெய்த மழையில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அது அப்புறப்படுத்தாமல் இருந்ததால் பேருந்தை வளைத்து சாலையில் ஓட்ட முயன்றார் ஓட்டுனர். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் நிலைமையும் கவலைக்கிடமாகவே உள்ளது.
உயிரிழந்தவர்களில் நாகப்பன் (50), சித்திரை (45), அண்ணாதுரை (34), தங்கபாண்டியன் (20), மணி (40) மற்றும் குமார் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 14 பேருக்கும் திருவள்ளூர் மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.