10ம் வகுப்பு படித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 29ந் தேதி வரை பதிவு செய்யலாம்!
10ம் வகுப்பு தேர்வு பெற்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாத மாணவர்கள் வசதிக்காக வரும் 29ஆம் தேதி வரை மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் உண்மை நகல்களை வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ்வாச்சானி தெரிவித்துள்ளார்.
எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் தயக்கமின்றி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். ஏதாவது ஒரு அலுவலக வேலை நாளில் தங்கள் கல்வித் தகுதியை வரும் 29ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.