Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்துல் கலாமை நிறுத்த 3வது அணி முடிவு

Advertiesment
அப்துல் கலாமை நிறுத்த 3வது அணி முடிவு

Webdunia

, திங்கள், 18 ஜூன் 2007 (16:20 IST)
3 வது அணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாம் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்கலாம் அடுத்த மாதம் முடிவடைவதைத் தொடர்ந்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சுயேட்சையாக போட்டியிடுமபைரோன் சிங் ஷெகாவத்திற்கதேசிய ஜனநாயக கூட்டணி இன்றஆதரவதெரிவித்துள்ளது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என அறிவித்திருந்த மூன்றாவது அணியின் இரண்டாவது ஆலோசானைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதலைமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு, சமாஜ் வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ. உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.3 வது அணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நிறுத்துவதென முடிவு செய்ய்ப்பட்டது.

இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா இதனை தெரிவித்தார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து தங்கள் முடிவை தெரிவிக்க இருப்பதாகவும், அனைத்து கட்சிகளும் கருத்துவேபாடுகளை மறந்து அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil