திருநெல்வேலியில் ரூ. 300 கோடி மதிப்பில் அமையயுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 4 வது கட்டமாக இலவச நிலம் வழங்கினார்.
நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு 4-வது கட்டமாக இலவச நிலம் வழங்கும் விழாவும், தகவல் தொழில்நுட்ப பூங்கா அடிக்கல்நாட்டும் விழாவும் பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில், முதலமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கினார். மேலும், திருநெல்வேலியில் ரூ. 300 கோடி செலவில் அமையயுள்ள தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ. 33 கோடியே 18 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 1141 திட்டப்பணிகளை அவர் திறந்து வைத்தார். விழாவுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். அரசு உயர் அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.