தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் 65 விழுக்காடு இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கானவை என்று உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை ஒற்றைச் சாளர முறையில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார்.
அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் குறித்து கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் பொன்முடி, அதன்படி சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டிற்கு 65 விழுக்காடு இடங்களையும், சிறுபான்மை கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.
எனினும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், ஜூன் 20 ஆம் தேதி முழு விவரம் தெரியவரும் என்றார்.