தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் இந்நோய் தடுப்புமுறை குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிப்படுகிறது.
அண்டை மாநிலமான கேரளாவில் சிக்குன் குனியா நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் தமிழ்நாட்டில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக சென்னையில் இந்நோய் தடுப்பு முறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் நகர் முழுவதும் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்துவரும் வாகனங்களிலும் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்படுகிறது.