Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலவரத்தை தூண்டுகிறது அதிமுக: அன்பழகன் குற்றச்சாட்டு

கலவரத்தை தூண்டுகிறது அதிமுக: அன்பழகன் குற்றச்சாட்டு

Webdunia

கோடா நாடு எஸ்டேட் பிரச்சனையில், கலவரத்தை தூண்ட அதிமுக திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதியை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக.வினர் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது முதலமைச்சர் கருணாநிதியின் உருவ மொம்மையையும் எரித்தனர்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளரும், தமிழக நிதி அமைச்சருமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சராக இருந்த போது ஜெயலலிதா, அதிகாரத்தைப் பயன்படுத்தி கோடா நாடு எஸ்டேட்டை வாங்கியதாகவும், அங்கு எந்தவித அனுமதி இல்லாமல் மாளிகை கட்டிருப்பதகாவும் தெரிவித்துள்ளார்.

மாளிகையைப் பற்றிய விவரத்தை குறிப்பிட்டு அதற்கு சொந்தக்காரரான ஜெயலலிதாவும், சசிகலாவும் முறைகேடாக நடந்து கொள்வதை தமிழக முதலமைச்சர் கருணாநிதி சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார் என்றும், ஆனால் அந்த மாளிகைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று, தன் மீது குற்றம் சுமத்தியதாக முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தோடு அவரைப் பற்றி இழிவான வார்த்தைகளை சொல்லி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு வருவாதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த பிரமாண்டமான மாளிகை ஜெயலலிதா, சசிகலா கூட்டுப் பொறுப்பில் இருக்கிறது என்பதை முதலமைச்சர் கருணாநிதி ஆதாரத்துடன் வெளியிட்ட உடன், உண்மை அம்பலமாகி விட்டது என்பதை உணர்ந்து, அதை திசை திருப்பவே தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை போடுவதாக ஜெயலலிதா, ஒரு வதந்தியை பரப்பி விட்டதாக அன்பழகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வருமான வரித்துறை சோதனை செய்யக்கூடாத அளவிற்கு நேர்மையானவரோ, நாணயமானவரோ அல்ல என்றும், அது கடந்த கால வழக்குகளிலேயே நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil