சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அக்னி எனப்படும் கத்திரி வெயில் முடிந்து ஒரு வாரம் ஆன நிலையிலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
இந்நிலையில், நேற்று காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் பின்னர் வெயில் கொளுத்தியது.
இந்நிலையில், இன்று சென்னை உட்பட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது.
அதற்கேற்ப சென்னையின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. ஓரிரு இடங்களில் லேசான தூறலும் போட்டுள்ளது.