Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநிலங்களவை : ஞானதேசிகன் வேட்பு மனுதாக்கல்

மாநிலங்களவை : ஞானதேசிகன் வேட்பு மனுதாக்கல்

Webdunia

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஞானதேசிகன் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்!

தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, அந்த இடங்களுக்கான தேர்தல் வருகிற ஜூலை 15 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 6 இடங்களில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலா 2 இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 1 இடத்திலும் போட்டியிடுகின்றன.

திமுக சார்பில் கனிமொழி மற்றும் திருச்சி சிவாவும், அதிமுக சார்பில் மைத்ரேயன் மற்றும் இளவரசனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக ஞானதேசிகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாத அக்கட்சியின் தலைமை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஞானதேசிகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், மத்திய அமைச்சர் ராசா, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக ஞானதேசிகன், முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Share this Story:

Follow Webdunia tamil