Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் ஆதரவிற்கு எங்கள் முதல் வணக்கம்

Advertiesment
உங்கள் ஆதரவிற்கு எங்கள் முதல் வணக்கம்

Webdunia

வெப்உலகத்தை தமிழ்.வெப்துனியா.காம் என்ற இந்த புதிய தோற்றத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

வெப்துனியா நிறுவன ஊழியர்களின் அதீத முயற்சி, கடின உழைப்பின் காரணமாகத்தான் இந்த புதிய தோற்றத்தில் வெப்உலகம் வாசகர்களை நாங்கள் காண்கிறோம். இந்த புதிய தோற்றத்திற்கு வாசகர்களாகிய உங்களது ஆலோசனைகளும், ஆதரவும் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. அதற்கு நன்றி.

புதிய வடிவமைப்பு, எழுத்துரு, மின்னஞ்சல், வாழ்த்து அட்டை, புகைப்படத் தொகுப்பு என எல்லோமே புது விதமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்.வெப்துனியா.காம் வாசகர்கள் விரும்பும் வகையில் புதிய பொலிவுடன் உலா வரும்.

வெப்உலகம்.காம் என்ற இணையதள முகவரியும் தமிழ்.வெப்துனியா.காம் என்று மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் ஏதோ ஞாபகத்தில் வெப்உலகம்.காம் என்று பதிவு செய்தாலும், தானாகவே அது தமிழ்.வெப்துனியா.காமிற்கு செல்லுமாறு இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை பரணி என்ற எழுத்துருவில் இருந்தது, யூனிகோட் என்று அழைக்கப்படும் பொது எழுத்துருவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்ல, புதிதாக இன்னும் ஏராளம்... இதுவரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் மட்டுமே இருந்து வந்த வெப்துனியா.காமின் இணையதளங்கள் இனி கன்னடம், மராட்டியம், குஜராத்தி, பஞ்சாபி, வங்காளி மொழிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவின் இந்திய மொழி இணையதளங்களின் எண்ணிக்கை 4ல் இருந்து இன்று முதல் 9 ஆக உயர்ந்துள்ளது. இது உங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு உங்களுக்காகவே எங்களால் செய்யப்பட்டதாகும்.

இந்த மாற்றங்கள் நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறோம். எப்போதும் போல உங்களுக்கு பிடித்தவை, குறைகள், ஆலோசனைகள் என எல்லாவற்றையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். அதுதான் எங்களுக்கு சிறந்த வழிகட்டியாக இருக்கும்.

உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆ தரவையும் என்றென்றும் எதிர்நோக்கி பணியாற்றுவோம்.

Share this Story:

Follow Webdunia tamil