மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் செல்லூர் ராஜூ போட்யிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.
மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகம் காலமானதை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வருகிற 26 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி விட்டது.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.
அதிமுக வின் அதிகாரபூர்வ வேட்பாளராக மதுரை மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளர் செல்லூர் கே.ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.