மாநிலங்களவைக்கு தமிழ் நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஆறு உறுப்பினர்களில் திமுக சார்பாக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழியும், முன்னாள் மக்களைவை உறுப்பினர் திருச்சி சிவாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுளனர்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அக்கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கருணாநிதி கூறினார்.
மாநிலங்களவைக்கு தமிழ் நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட வேண்டிய 6 உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் மாதம் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 4 வேட்பாளர்களும், எதிர்கட்சியான அதிமுக கூட்டணி சார்பில் 2 வேட்பாளர்களும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் து.ராஜா வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.