தமிழகத்தில் சுட்டெரிக்கும் கத்திரி வெயிலுக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த நாட்களாக அக்கினி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று சென்னையில் அதிகபட்சமாக 110 டிகிரி பாரன்கீட் வெப்பநிலை பதிவானது.
சென்னை மட்டுமல்லாமல் அதன் புற நகர் பகுதிகளான ஆவடி, தாம்பரம் மற்றும் வேலூர், திருச்சி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் கத்திரி வெயில் சுட்டெரிக்கிறது. தமிழகத்தில் இதுவரை கத்திரி வெயிலுக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.