Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனியை பரிந்துரை செய்தது சச்சின் - பவார்

தோனியை பரிந்துரை செய்தது சச்சின் - பவார்
, சனி, 22 மார்ச் 2008 (10:55 IST)
இந்திய அணியின் தலைமைப் பொறுப்பிற்கு தோனியை பரிந்துரை செய்தது சச்சின் டெண்டுல்கர் என்றும் இந்தியா கோப்பையைத் தட்டிச் சென்ற முதல் இருபதுக்கு 20 உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இளம் வீரர்களை மட்டுமே தேர்வு செய்யுங்கள் என்றும் சச்சின் கூறியதாக பி.சி.சி.ஐ. தலைவர் ஷரத் பவார் கூறியுள்ளார்.

கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ராகுல் திராவிட் அணித் தலைவர் பொறுப்பில் தான் நீடிக்க இயலாது என்று தன்னிடம் கூறிய பிறகு அணித் தேர்வாளர்கள் சிலர் சச்சினின் பெயரை தலைமைப் பொறுப்பிற்கு பரிந்துரை செய்ததாக கூறினார் பவார்.

ஆனால் சச்சினிடம் இது குறித்து கேட்டப்போது "தயவு செய்து இதைச் செய்யாதீர்கள்" என்று கூறியதாகவும் தோனி போன்றவரிடம் தலைமைப் பொறுப்பை அளிக்கலாம் என்றும் சச்சின் கூறியதாக ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இருபதுக்கு 20 உலகக் கோப்பை அணியில் இளம் வீரர்களை சேருங்கள் என்று கூறியதும் சச்சின் டெண்டுல்கர்தான் என்று கூறியுள்ளார் பவார்.

இது குறித்து சச்சின் தன்னை நேரடியாக சந்தித்து தனது தலைமுறை வீரர்களை இருபதுக்கு 20 அணியில் தேர்வு செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் தனது தலைமுறை வீரர்கள் இருபதுக்கு 20 அணிக்கு தகுதியானவர்கள் இல்லை எனவும் கூறியதாக தற்போது பவார் கூறியுள்ளார்.

டெஸ்ட் அணித் தலைவர் அனில் கும்ப்ளேயின் தலைமைப் பொறுப்பு பற்றியும் புகழ்ந்து பேசிய ஷரத் பவார் சர்ச்சைகள் மிகுந்த ஆஸ்ட்ரேலிய தொடரில் மைதானத்திலும் சரி, மைதானத்திற்கு வெளியேயும் சரி கும்ப்ளே விஷயங்களை கையாண்ட விதம் பெரும் பாராட்டிற்குரியது என்றார் பவார்.

Share this Story:

Follow Webdunia tamil