Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷோயப் அக்தர் மீது இறுகும் பிடி!

Advertiesment
ஷோயப் அக்தர் மீது இறுகும் பிடி!
, வெள்ளி, 14 மார்ச் 2008 (15:04 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது வெளிப்படையாக விமர்சனம் வைக்கும் ஷோயப் அக்தர் மீது தீவிர ஒழுங்கு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகிவரும் நிலையில், தனக்கு ஆதரவாகப் பேசி தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்க மூத்த இந்திய கிரிக்கெட் வா‌ரிய அதிகாரி ஒருவரை ஷோயப் அக்தர் நாடியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஷோயப் அக்தர் கடந்த ஆண்டு 13 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டதோடு 3.4 மில்லியன் ரூபாய்களும் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஷோயப் அக்தர் மீதான ஒழுங்கு நடவடிக்கைப் புகாரை விசாரித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒழுங்குக் குழு தன் அறிக்கையை இம்மாதம் 22ஆம் தேதி சமர்பிக்கவுள்ளது.

சமீபமாக லாகூரில் நடைபெற்ற பென்டாங்குலர் கோப்பை போட்டியின் போது இவர் தலைமை வகித்த ஃபெடரல் ஏரியாஸ் ஓய்வறையில் அணியின் கிரிக்கெட் உணர்வை பாதிக்குமாறு நடந்து கொண்டார் என்ற புதிய புகாரும் எழுந்துள்ளது.

தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகளை எரிச்சலடையச் செய்யும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுவருவதால் இந்த முறை அவர் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது என்று லாகூர் அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த இறுக்கமான நிலைகளிலிருந்து வெளிவர இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஐ.பி.எல் உயரதிகாரி ஒருவரின் உதவியுடன், பாகிஸ்தான் புதிய அரசின் தலைவர்களின் செல்வாக்கையும் அவர் நாடியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதுவரை இந்த முயற்சிகளில் ஷோயப் வெற்றி பெறவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தடை செய்யப்பட்டால் ஐ.பி.எல்-இல் ஆட முடியாது என்பதால், ஷோயப் அக்தர் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் லீகில் அட கபில்தேவை சந்தித்திருப்பதாகவும் மற்றொரு தகவ்ல் தெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil