Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்ட்ரேலியாவில் நிறவெறி : முரளிதரன் மீது முட்டை வீச்சு!

Advertiesment
ஆஸ்ட்ரேலியாவில் நிறவெறி : முரளிதரன் மீது முட்டை வீச்சு!
, சனி, 2 பிப்ரவரி 2008 (15:30 IST)
ஆஸ்ட்ரேலியாவின் ஹோபார்ட் நகரில் ஆஸ்ட்ரேலிய ரசிகர் ஒருவர் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முகத்தில் முட்டையால் அடித்துள்ளார்.

"முரளிதரன் மீது முட்டை வீசப்பட்டது, அது அவரது முகத்தை தாக்கியது" என்று இலங்கை கிரிக்கெட் முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு தங்களது இரவு உணவை முடித்துக் கொண்டு இலங்கை அணி தங்களது விடுதிக்கு திரும்பிக் கொண்டிருத போது ஹோபார்ட் நகரவாசிகள் சிலர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நோக்கி கேலிக்கூச்சல் போட்டபடியே தாக்குதல் நடத்தினர் என்று பத்திரிக்கை செய்தி ஒன்று கூறியுள்ளது. நிலைமை தீவிரமடையே அங்கு காவல்துறை வந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, இலங்கை வீரர்களை பாதுகாப்புடன் விடுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஏற்கனவே நிறவெறி குறித்து புதிய சர்ச்சைகள் எழுந்துள்ள சூழ்நிலையில் முத்தையா முரளிதரன் முகத்தில் முட்டை வீசியிருப்பது ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட்டிற்கு நெருக்கடிகளை கொடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil