Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபெடரேஷன் கோப்பை: நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி!

ஃபெடரேஷன் கோப்பை: நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி!
, சனி, 2 பிப்ரவரி 2008 (10:48 IST)
ஆசிய- ஓஸியானியா குரூப்-1 ஃபெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது.

இந்தியாவின் சானியா மிர்சா, தசைப்பிடிப்பு காரணமாக விளையாடாததே இந்தியாவின் பின்னடைவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

வியாழக்கிழமை நடந்த போட்டியில் 1-2 என்ற கணக்கில் நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வியுற்றது. முன்னதாக, இந்தோனேஷியாவிடமும் இந்தியா 1- 2 என்று தோல்வி அடைந்தது.

2 ஒற்றையர், ஒரு இரட்டையர் எனும் அடிப்படையில் போட்டி நடைபெற்றுவருகிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இந்தியாவின் இஷா லகானி மட்டும் வெற்றி பெற்றார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் சுனிதாராவும், இரட்டையர் போட்டியில் லகானி, ஷிகா ஒபராய் ஜோடியும் தோல்வியைத் தழுவினர். கடைசி லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவுடன் இந்தியக் குழு விளையாட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil