இந்திய அணித் தலைவர் அனில் கும்ளே கேட்டுக் கொண்டதின் பேரில் ஆஸ்ட்ரேலியா வீரர் ஹாக் மீதான குற்றம்சாற்றை இந்திய அணி திரும்பப் பெற்றுள்ளது.
ஆஸ்ட்ரேலிய வீரர் ஹாக், சிட்னி டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணித் தலைவர் அனில் கும்ளேவை வசைபாடினார். இது குறித்து இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் புகார் செய்தது. அதில், ஹர்பஜன் சிங்குக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விதிக்கப்பட்ட தடைபோல் ஹாக்குக்கும் விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஹாக் மீது கூறிய குற்றம்சாற்றை இந்திய அணி திரும்ப பெற்றுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடன் முதன்மை அதிகாரி ரத்னாகர் செட்டி கூறுகையில், அணித் தலைவர் அனில் கும்ளே கேட்டுக் கொண்டதின் பேரில் ஹாக் மீதான குற்றம்சாற்றை இந்திய அணி திரும்ப பெற்றுள்ளது. கிரிக்கெட்தான் முக்கியமே தவிர தனி மனித குற்றம்சாற்று முக்கியம் அல்ல என்று கும்ளே கூறியதாக செட்டி கூறினார்.