Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் பிரேசில் வீரர் ரொமாரியோவிற்கு தடை

Advertiesment
முன்னாள் பிரேசில் வீரர் ரொமாரியோவிற்கு தடை
, புதன், 19 டிசம்பர் 2007 (11:55 IST)
1994ம் ஆண்டு பிரேசில் அணி கால்பந்து உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த அப்போதைய நட்சத்திர வீரர் ரொமாரியோ ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது நிரூபிக்க‌ப்பட்டதால் அவர் விளையாட 120 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாஸ்கோடகோமா அணிக்காக இவர் விளையாடிய பிறகு, அவருக்கு ஊக்க மருந்து சோதனை செய்தபோது, ஃபினாஸ்டிரைட் என்ற ஊக்க மருந்தை அவர் எடுத்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.

தலை முடி உதிர்வதை தடுக்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டபோது அந்த மருந்துகளில் தடை செய்யப்பட்ட இந்த மருந்து இருந்ததாக தெரிகிறது.

இந்த மருந்து 2005ல் தடை செய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் சேர்க்க‌ப்பட்டது. ஏற்கனவே பல வீரர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொண்டத‌ற்காக ‌‌விளையாட தடை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

41 வயதான ரொமாரியோ 1994 உலகக் கோப்பை கால்பந்தில் பிரேசிலின் முன்னணி வீரராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஊக்க மருந்து விவகாரத்தை தானே வெளியிட்ட ரொமாரியோ, 2008 ஆம் ஆண்டிலும் பல போட்டிகளை விளையாடப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தான் விளையாடிய அனைத்து கால்பந்து போட்டிகளையும் சேர்த்து 1000 கோல்களை அடித்துள்ளதாக கூறிக்கொள்கிறார் ரொமாரியோ.

Share this Story:

Follow Webdunia tamil