இதுவே எனது கடைசி ஆஸ்ட்ரேலியா பயணமாக இருக்கும் என்று இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
அனில் கும்ளே தலைமையிலான இந்தியா அணி நேற்று ஆஸ்ட்ரேலியா சென்றது. அங்குள்ள விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், இதுவே எனது கடைசி ஆஸ்ட்ரேலியா பயணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடவே இங்கு வந்திருக்கிறேன். ஆஸ்ட்ரேலியா கிரிக்கெட் விளையாட ஏற்ற இடம். எல்லோரும் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறோம். விளையாட ஆவலோடு உள்ளோம் என்று டெண்டுல்கர் கூறினார்.