தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சிறிசாந்த அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முழுவதும் அவர் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கபட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிறிசாந்த். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடவில்லை. கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் 2-வது டெஸ்டிலும் அவர் ஆடமாட்டார் என்று ஏற்கனவே கிரிக்கெட் பேரவை செயலாளர் நிரஞ்சன் ஷா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் காயம் முழுமையாக குணமடைய வாய்ப்பு இல்லாததால் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் முழுவதும் சிறிசாந்த் ஆடமாட்டார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்வது நல்லது என்று அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் தோள்பட்டைக் காயத்துக்காக சிறிசாந்த் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணத்திலும் சிறிசாந்த் பங்கேற்பது சந்தேகம்தான்.
மற்றொரு வேகப்பந்து வீரரான ஆர்.பி.சிங்கும் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். முதல் டெஸ்டில் விளையாடாத அவர் 2-வது டெஸ்டிலும் ஆடவில்லை. 3-வது டெஸ்டில் அவர் விளையாடுவது இன்னும் உறுதியாக தெரியவில்லை.