டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்து 2வது இடத்தில் இருந்த ஆஸ்ட்ரேலிய வீரர் ஆலன் பார்டர் சாதனையை இந்தியா வீரர் சச்சின் டெண்டுல்கர் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் மேற்கு இந்திய வீரர் பிரைன் லாரா முதல் இடத்தில் உள்ளார். இவர் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,953 ரன் எடுத்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் ஆஸ்ட்ரேலியா வீரர் ஆலன் பார்டர் இருந்தார். இவர் 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,174 ரன் குவித்திருந்தார்.
தற்போது இந்த சாதனையை இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் முறியடித்துள்ளார். இவர் 141 டெஸ்ட் போட்களில் விளையாடி 11,183 ரன்கள் எடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவிப்பில் முதல் இடத்தில் உள்ள லாரா சாதனையை முறியடிக்க சச்சின் இன்னும் 771 ரன் எடுக்க வேண்டியுள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 15,000 ஆயிரம் ரன் குவித்து சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.