முதுகு பிடிப்பு குணம் ஆகாததால் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இடம்பெற மாட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு குழுத் தலைவர் சலாவூதீன் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உமர் குல், முதுகு பிடிப்பு காரணமாக தற்போது டெல்லியில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை.
இந்நிலையில் அவர் முழுவதும் குணமாகாததால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் தேர்வுக் குழுத் தலைவர் சலாவூதீன் கூறியுள்ளார்.
உமர் குல்லுக்கு பதிலாக இப்திகா அஞ்சும் அழைக்கப்படுவார் என்று அந்நாட்டு தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.