போதையில் வாகனம் ஓட்டியதற்காக குத்து சண்டை வீரர் மைக் டைசனுக்கு ஒருநாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன். இவர் மீது போதைப் பொருள் வைத்திருந்தாகவும், போதையில் வாகனம் ஓட்டிச் சென்றதாகவும் சமீபத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் போது டைசன், தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினார்.
எதிர்தரப்பு வழக்கறிஞர் மைக் டைசனுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்து நீதிபதி அளித்த தீர்ப்பில், மைக் டைசனுக்கு ஒருநாள் சிறை தண்டனையும், போதைப் பழக்கத்திற்காக மூன்றாண்டு காலம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.