நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய வீரர் யுவராஜ் சிங்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடிய யுவராஜ் சிங், உமர்குல் வீசிய பவுன்ஸ் பந்தை பேட்டை சுழற்சி அடித்தார். அப்போது பந்து தோள்பட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. உடனடியாக விக்கெட் கீப்பரும், உமர்குல்லும் நடுவர் சுரேஷ் சாஸ்திரியிடம் அவுட் கேட்டனர். அவரும் உடனே அவுட் கொடுத்து விட்டார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த யுவராஜ் சிங், தோள்பட்டையில் பந்து பட்டதாக நடுவரிடம் கூறினார். நடுவரின் தவறான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே போகாமல் சில நிமிடம் மைதானத்திலேயே யுவராஜ் சிங் நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து யுவராஜ் சிங் நடத்தை விதியை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவர் (ஐ.சி.சி.) ரோசன் மகனாமா புகார் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 20 விழுக்காடு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நடுவர் `அவுட்' கொடுத்து விட்டால் வீரர்கள் உடனடியாக மைதானத்தை விட்டு செல்ல வேண்டும் என்பது சர்வதேச கிரிக்கெட் பேரைவயின் (ஐ.சி.சி.) விதி முறையாகும்.