இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திரசிங் தோனிக்கு ஜார்கண்ட் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் துவக்கி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று நடைபெற்ற விழாவில் தோனிக்கும், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் சுமராய் டிடிக்கும் ஜார்கண்ட் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.
நேற்று குவாலியரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி காரணமாக இந்த விருதை தோனி நேரில் பெற இயலாமல் போனது. சுமராய் டிடிக்கு ஜார்கண்ட் ரத்னா விருதை மாநில முதலமைச்சர் மதுகோடா, மாநில ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சிபுசோரன் ஆகியோர் வழங்கினர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 145 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.43.5 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.