Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வார்ன் - முரளிதரன் டிராஃபி வெளியீடு

Advertiesment
வார்ன் - முரளிதரன் டிராஃபி வெளியீடு
, வியாழன், 15 நவம்பர் 2007 (11:01 IST)
ஆஸ்ட்ரேலிய இலங்கை கிரிக்கெட் தொடருக்கான வார்னமுரளிதரன் டிராஃபி இன்று ஹோபார்ட்டில் வெளியிடப்பட்டது.

பகைமையை மறந்து வார்னும் முரளிதரனும் இதில் பங்கேற்று தங்களது நட்பை இன்முகதுத்டன் பரிமாறிக்கொண்டனர்.

முரளிதரன் பந்து வீச்சை டெஸ்ட் போட்டி நடைபெறும்போது பரிசோதனை செய்யவேண்டும் என்று ஷேன் வார்னின் பயிற்சியாளர் டெர்ரி ஜென்னர் கூறியதை ஆமோதித்து ஷேன் வார்ன் ஆஸ்ட்ரேலிய பத்திரிகை ஒன்றில் எழுதியதை அடுத்து முரளிதரன் கடும் எரிச்சலைடைந்தார்.

ஷேன் வார்ன் வாழ்க்கையில் ஒரு வருந்தத்தக்க மனிதர் என்றும், அவரது உலக சாதனை தன்னால் தட்டிச் செல்லப்படுவது அவருக்கு விருப்பமானதாக இல்லை என்றும் முரளிதரன் நேற்று வாருனுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் வார்ன்-முரளிதரன் டிராஃபி வெளியீட்டு நிகழ்ச்சியில் ஷேன் வார்னுடன் ஒரு வார்த்தைக்கூட பேச மாட்டேன் என்றும் முரளிதரன் அறிவித்திருந்தார்.

ஆனால் ஷேன் வார்ன் முரளிதரனை தொடர்பு கொண்டு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் இருவரும் இன்று டிராஃபி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தங்களிடையே இருந்த கருத்து வேறுபாடு முடிவடைந்தது என்று புன்முறுவலுடன் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil