''கிரிக்கெட் போட்டிகளில் தாம் பெற்ற அனுபவத்தை பயன்படுத்தி அணிக்கு வெற்றியை தேடித் தருவேன்'' என்று இந்திய டெஸ்ட் அணித் தலைவர் அனில் கும்ளே கூறினார்.
பந்துவீச்சாளராக உள்ள நான், அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சாதகமான விஷயமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளாக பெற்ற அனுபவத்தை பயன்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தர முயற்சிப்பேன் என்று கும்ளே மேலும் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டும். ஒருநாள் போட்டியில் அணித் தலைவராக இருக்கும் தோனியோடு டெஸ்ட் போட்டிகளில் இணைந்து பணியாற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவருடைய ஆலோசனைகளையும் கேட்டு செயல்படுவேன் என்று அனில் கும்ளே கூறினார்.