இந்திய அணியை தலைமையேற்று வழிநடத்தும் வாய்ப்பிற்காக தான் நீண்ட காலம் காத்திருந்நதாக அனில் கும்ளே கூறியுள்ளார்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள அனில் கும்ளே பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அணித் தலைவர் பொறுப்பை எதிர்பார்த்து காத்திருந்தேன். தாமதமாகக் கிடைத்தாலும் இப்பொறுப்பு சிறந்ததே. சவால் நிறைந்த இப்பொறுப்பை சந்தோஷமாக ஏற்கிறேன். எனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அணியில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் முழுமையாகக் கிடைக்கும் என்று கூறிய அனில் கும்ளே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மிக முக்கியமானது என்று கூறினார்.