ரஞ்சி கோப்பை போட்டியில் தன்னுடைய ஆட்டம் மிகுந்த திருப்தியை தருவதாக ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய அணித் தலைவர் ராகுல் திராவிட், இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையில் விளையாடினார்.
நேற்று அவர் 214 ரன்களை குவித்தார். இதன் மூலம் தேர்வுக் குழுவினருக்கு அவர் தனது திறமையை உணர்த்தியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய திராவிட், தன்னுடைய ஆட்டம் மிகுந்த திருப்தியை தருவதாக தெரிவித்தார்.
அதிக நேரம் மைதானத்தில் செலவிட முடிந்தது பயனுள்ளதாக இருக்கும் என்று மேலும் அவர் கூறினார்.