Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வு பெறுவதை பரிசீலித்து வரும் கில்கிறிஸ்ட்!

Advertiesment
ஓய்வு பெறுவதை பரிசீலித்து வரும் கில்கிறிஸ்ட்!

Webdunia

, செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:23 IST)
ஆஸ்ட்ரேலிய அ‌‌ணி‌யி‌ன் விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மெனும் துணைக் கேப்டனுமான ஆடம் கில்கிறிஸ்ட் இந்த ஆஸ்ட்ரேலிய கோடைகால கிரிக்கெட் தொடர்களை அடுத்து ஓய்வு பெறலாம் என்று பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேனில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை அடுத்து அங்கு ஒரு உணவு விருந்தில் கில்கிறிஸ்ட் இதனை தெரிவித்ததாக ஆஸ்ட்ரேலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"அடுத்த ஆண்டு இதே தருணத்தில் நான் இங்கு இருப்பது பற்றி உறுதியாகக் கூற முடியவில்லை" என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆஷஸ் தொடரின் போது ஓய்வு குறித்த எண்ணம் தனக்கு ஏற்பட்டதாக கூறிய கில்கிறிஸ்ட் அதன் பிறகு உலகக் கோப்பை போட்டிகள் ஒரு உந்துதலை ஏற்படுத்தியதாகவும், பிறகு கிடைத்த நீண்ட ஓய்வு தற்போது ஆடுவதற்கான உத்வேகத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மிக நெருக்கமாக வருவதால் உயர் மட்ட கிரிக்கெட்டில் தன்னால் தொடர்ந்து பங்கேற்க இயலுமா என்பது கேள்விக்குறியே என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil