பிசிசிஐ-க்கு எதிராக துவங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் லீக் இருபதுக்கு 20 போட்டிகள் இம்மாத இறுதியில் துவங்குகின்றன. இதில் பங்கு பெறும் அணிகளுக்கான வண்ண உடைகள் தயாராகிவிட்டதாக ஐசிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
இந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகார் லையன்ஸ், மும்பை சாம்பியன்ஸ், கொல்கத்தா டைகர்ஸ், டெல்லி ஜெட்ஸ், சென்னை சூப்பர்ஸ்டார்ஸ், ஐதராபாத் ஹீரோஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.
இந்த ஒவ்வொரு அணிக்குமான வண்ண உடைகள், சின்னங்களை நேற்று ஐசிஎல் வெளியிட்டது.
புதிய, திறமையான வீரர்கள் பங்கேற்க ஐசிஎல் துணை புரிகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று செயற்குழு வாரிய தலைவர் கபில் தேவ் தெரிவித்தார்.
இந்த செயற்குழு வாரியத்தில் டோனி கிரேக், டீன் ஜோன்ஸ், கிரான் மோர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில் விளையாடும் அணிகளில் மேற்கிந்திய தீவுகளின் ஓய்வு பெற்ற நட்சத்திரம் பிரையன் லாரா, பாகிஸ்தான் நட்சத்திரம் இன்சமாம் உல் ஹக், நியூசீலாந்து பன்முக வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் மற்றும் இந்திய உள் நாட்டு கிரிக்கெட்டின் இளம் வீரர்கள் பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.