கேரள திரைப்படத் துறையினர் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் சாந்தகுமார் ஸ்ரீசாந்தை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதற்கு தற்போது சமயமில்லை என்று ஸ்ரீசாந்த் மறுத்துள்ளார்.
“நான் அழகாக இருக்கிறேன் என்று தெரியும்...ஆனால் நடிகைகள் காத்திருக்கட்டும்..." என்று இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ஸ்ரிசாந்த் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் நடிக்க ஸ்ரிசாந்தை அணுகியுள்ளனர். ஆனால் படங்களில் நடிக்கும் திட்டமில்லை என்றும் ஒரு கிரிக்கெட் வீரராக தனது வாழ்வை உருவக்கிக் கொள்ளும் முயற்சியில் முழுக்கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.