இந்தியாவிற்கு எதிரான தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்கள் நம்பிக்கை மிகுந்த மனநிலையில் வருவார்கள் என்று அந்த அணியின் தலைவர் சோயிப் மாலிக் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் தொடரை சொந்த மண்ணில் இழந்தது பாகிஸ்தான் அணி.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அணித் தலைவர் ஷோயிப் மாலிக், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றத்தை தருகிறது என்றார்.
இந்த தோல்வி வீரர்களை பாதிக்காது. விரைவில் நடைபெற உள்ள இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வீரர்கள் நம்பிக்கை மிகுந்த மனநிலையில் வருவார்கள் என்று மாலிக் கூறினார்.
இந்திய அணி மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதால் இந்த தொடர் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று மேலும் கூறினார் சோயிப் மாலிக்.