ஆசிய உள்விளையாட்டு அரங்க போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் செஸ் போட்டிகளின் மூலம் கிடைத்துள்ளது.
சீனாவின் மக்காவு நகரில் இரண்டாவது ஆசிய உள்விளையாட்டு அரங்க போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதில் இந்தியா சார்பில் 148 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகளில் இந்தியா செஸ் போட்டிகளில் முதல் தங்கத்தை வென்றுள்ளது. அணி பிரிவில் இந்தியாவிற்கு இந்த தங்கம் கிடைத்தது.
இந்திய அணி நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் முறையே பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை வீழ்த்தியது. தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை இந்தியா வீழ்த்தியதால், தங்கம் வெல்லும் வாய்ப்பு உறுதியானது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டங்களில் கஜகஸ்தான், இந்தோனேஷியாவை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது. தனி நபர் பிரிவிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தங்கம் வெல்லும் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.