பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தருக்கு இந்திய சுற்றுப் பயணமே கடைசி வாய்ப்பு என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 13 ஆட்டங்களில் ஆட தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் இந்திய சுற்றுப் பயணத்தில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நசீம் அஷ்ரப், ஷோயிப் அக்தருக்கு இந்திய சுற்றுப்பயணம் கடைசி வாய்ப்பு. இந்திய சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமானது என்று கூறிய அவர், இதில் தனது திறமையை நிரூபித்து விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவேண்டியது அக்தரின் பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.
உலகக் கோப்பையை விட முக்கியமான இந்திய சுற்றுப்பயணத்தில் அக்தருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறிய அவர், அதனை அக்தர் உணர்ந்து விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.