டெஸ்ட் போட்டிகளில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் 396 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் நேற்று உலகச் சாதனை புரிந்தார்.
கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் 3ம் நாள் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர் உமர் குல் விக்கெட்டை ஸ்டம்ப் செய்து வீழ்த்தியதுடன் பவுச்சர் ஆஸ்ட்ரேலிய விக்கெட் கீப்பர் இயான் ஹீலியின் சாதனையை முறியடித்து உலக சாதனை நிகழ்த்தினார்.
தனது 103வது டெஸ்டை ஆடி வரும் மார்க் பவுச்சர் கேட்ச்கள் மூலம் 378 வீரர்களையும் ஸ்டம்பிங் முறையில் 18 வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
இயான் கீலி 119 டெஸ்ட்களில் 395 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து இதுநாள் வரை உலக சாதனையை தன் வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க் பவுச்சருக்கு அருகில் தற்போது ஆடம் கில்கிறிஸ்ட் 90 போட்டிகளில் 381 வீரர்களை ஆட்டமிழக்கச்செய்து நெருங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.