தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்பை தட்டிச் சென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு ரூ. 5 லட்சம் பரிசளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக்கை பாராட்டி, அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கேரள அரசு ஸ்ரீசாந்திற்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தது, அடுத்தபடியாக ராபின் உத்தப்பாவிற்கு கேரள அரசு ரூ.3 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
ராபின் உத்தப்பா கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்தாலும் அவரது தாயார் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த பரிசுத் தொகையை கேரள அரசு அறிவித்துள்ளது.