தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்களான இந்திய அணிக்கு சச்சின் மற்றும் சவ்ரவ் கங்குலி தங்களது பாரட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொலைபேசி மூலம் பேசிய சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் தற்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்றார்.
இந்த வெற்றி முழுக்க முழுக்க ஒரு அணியின் திறமையே என்று கூறிய சச்சின், தோனிக்கு சிறப்புப் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்திய அணிக்கு வாழ்த்துக்களை கூறிய சவ்ரவ் கங்குலி, தோனி மூலம் இந்திய அணிக்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.
நெருக்கடியான தருணங்களில் வீரர்கள் காட்டிய பொறுமையும், நிதானமும் ஆச்சரியமளிப்பதாக இருந்தது என்று சுட்டிக்காட்டினார்.