ஆஸ்ட்ரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் சர்வதேச போட்டித் தொடர்களுக்கு தோனி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது!
ஆவலுடன் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த விரேந்திர சேவாக் இரண்டு தொடருக்கும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங் அணியின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அணித் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் திடீரென விலகியதையடுத்து ஒரு நாள் அணித் தலைவராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 7 ஆட்டங்களும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 போட்டிகள் என மொத்தம் 12 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இஃர்பான் பத்தான், ஹர்பஜன் சிங் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மோசமாக பந்து வீசி வரும் அஜித் அகார்கர் மற்றும் முனாப் படேல் நீக்கப்பட்டனர். வாய்ப்பே அளிக்கப்படாத ரோஹித் ஷர்மாவும் நீக்கப்பட்டுள்ளார். விரேந்திர சேவாகிற்கும் தற்போது அணியில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி :
மகேந்திர சிங் தோனி (அணித் தலைவர்), யுவராஜ் சிங் (துணைத் தலைவர்), ராகுல் திராவிட், சச்சின் டென்டுல்கர், செளரவ் கங்கூலி, தினேஷ் கார்த்திக், கெளதம் காம்பிர், ராபின் உத்தப்பா, இர்ஃபான் பத்தான், ரமேஷ் பொவார், பியூஷ் சாவ்லா, ஆர்.பி.சிங், ஜாஹிர் கான், ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் சிங்.