ஆஸ்ட்ரேலியா, பாகிஸ்தான் ஒரு நாள் போட்டித் தொடருக்கான இந்திய அணித் தலைவராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து திராவிட் விலகியதால் புதிய தலைவர் தேர்வு மும்பையில் தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்கார் தலைமையில் இன்று நடந்தது.
அப்போது, புதிய தலைவராக தோனி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 7 ஒரு நாள் போட்டி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிக்கு இந்திய அணித் தலைவராக தோனி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.