சர்வதேச கிரிக்கெட் பேரவையான ஐசிசியின் ஆதிக்கத்தை போட்டி அமைப்பான இந்திய கிரிக்கெட் லீக் ஒழிக்க முடியும் என்று ஆஸ்ட்ரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
தற்போது ஐசிசி கிரிக்கெட்டை முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இதனால் புதிய வீரர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ஐசிஎல் போன்ற போட்டி அமைப்பு தேவைப்படுகிறது என்று தான் கருதுவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தனக்கு தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித்தைக் காட்டிலும் 10 வயது அதிகம் என்று கூறிய கில்கிறிஸ்ட் இதனால் ஐசிஎல் போன்ற அமைப்பு தன்னைப் போன்ற வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைகிறது என்று கூறினார்.
ஆனால் ஐசிஎல் உடன் ஒப்பந்தம் செய்துகொள்வது பற்றி அவர் ஒன்றும் தெரிவிக்கவில்லை.