நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. வயிற்று வலிக்காக தவறான மாத்திரையை சாப்பிட்டு விட்டேன் என்று தடகள வீராங்கனை சாந்தி கூறினார்.
வயிற்று வலி எனக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. தினமும் இதற்காக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். கடந்த 5ஆம் தேதி தவறுதலாக வேறு மாத்திரையை சாப்பிட்டு விட்டேன் என சாந்தி கூறினார்.
மேலும், என்னால் பேச முடியவில்லை. தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள். மயக்கமாக இருக்கிறது. வேறு எந்த தொந்தரவு, பிரச்சினையும் எனக்கில்லை. தற்கொலை முயற்சியில் நான் ஈடுபடவில்லை. வேறு எதுவும் கேட்காதீர்கள் என்று சாந்தி கேட்டுக் கொண்டார்.