Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வு பற்றி இன்னமும் சிந்திக்கவில்லை-சச்சின்

Advertiesment
ஓய்வு பற்றி இன்னமும் சிந்திக்கவில்லை-சச்சின்

Webdunia

, வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (11:09 IST)
ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வு பெறப்போகிறார் என்று வெளியாகிய செய்திகளை மறுத்து தற்போது ஓய்வு குறித்து சிந்திக்கவில்லை என்று சச்சின் கூறியுள்ளார்.

"நான் இன்னமும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடனே ஆடிவருகிறேன்... ஓய்வு பெறும் எண்ணம் என் மனதில் இன்னமும் உதிக்கவில்லை..." என்று செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் ஒரு நாள் தொடருக்கு பிறகு சச்சின் ஓய்வு பெறுவார் என்று செய்திகள் உலவி வந்தன, மேலும் அவர் ஒரு நாள் சர்வதேச போட்டிகள் குறைந்த இடைவெளிகளில் நடைபெறுவதால், உடனுக்குடன் ஆடுவது சற்று கடினமாக உள்ளது என்று தெரிவித்ததை தொடர்ந்து அவர் ஓய்வு பெறுவார் என்பது போன்ற செய்திகளை பத்திரிக்கைகள் வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து அவர் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய சுற்றுப்பயணத்தில் 10 ஒரு நாள் ஆட்டங்களில் சச்சின் 548 ரன்களை விளாசியுள்ளார். இதில் 4 முறை 90க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். ஸ்ட்ரைக்ரேட் 85 சதவீதம்.

Share this Story:

Follow Webdunia tamil