Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாக்கிக்கு அரசின் ஆதரவு இல்லை : பாஸ்கரன்!

Advertiesment
ஹாக்கிக்கு அரசின் ஆதரவு இல்லை : பாஸ்கரன்!

Webdunia

, திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (20:52 IST)
ஹாக்கி விளையாட்டிற்கு மத்திய அரசு போதுமான ஆதரவு அளிக்காததே இன்றைக்கு இந்த அளவிற்கு ஹாக்கி விளையாட்டில் தரம்தாழ்ந்துப் போனதற்குக் காரணம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் கூறியுள்ளார்!

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன், இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருந்தும், அதற்காக மத்திய அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார்.

ஹாக்கியின் தரத்தை உயர்த்த பயிற்சிக் கழகம் ஒன்றை தான் துவக்கப் போவதாகவும், அதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு தேவை என்று பாஸ்கரன் கூறினார்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையில் துவங்கவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டிகளில் தென் கொரிய அணி நமக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று பாஸ்கரன் கூறினார்.

இதற்கிடையே, யு.என்.ஐ.க்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், உரிய விளம்பரமும், ஆதரவும் அளிக்கப்பட்டால் ஹாக்கி மிகப் பெரிய விளையாட்டாக உயரும் என்று இந்தியாவின் தலைசிறந்த முன்னணி ஆட்டக்காரராகத் திகழ்ந்துவரும் தன்ராஜ் பிள்ளை கூறியுள்ளார்.

"ஹாக்கி போட்டிக்கு முறையான விளம்பரம் அளிக்கப்பட வேண்டும். மக்களின் மனதில் ஹாக்கி விளையாட்டின் மீது ஆர்வம் பெருகும் வகையில் ஊடகங்கள் முன்னுரிமை தந்து ஹாக்கி செய்திகளை வெளியிட வேண்டும்" என்றும் தன்ராஜ் பிள்ளை கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil