Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருபதுக்கு20 உலக கோப்பை : சச்சின், திராவிட், கங்கூலி இல்லை!

Advertiesment
இருபதுக்கு20 உலக கோப்பை : சச்சின், திராவிட், கங்கூலி இல்லை!

Webdunia

, சனி, 7 ஜூலை 2007 (20:38 IST)
இருபதுக்கு20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மூத்த வீரர்களான சச்சின், ிராவிட், கங்குலி ஆகியோர் பெயர்கள் இடம்பெறவில்ல்லை.

இருபதுக்கு20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செம்டம்பர் 11 ஆம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான 30 பேர் அடங்கிய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணித் தலைவர் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்கூலி ஆகியோரது பெயர்கள் இடம் பெறவில்லை. இளம் வீரர்கள் இடம் பெறும் வகையில் மூத்த வீரர்களான இவர்கள் தாங்களாகவே முன்வந்தஇருந்து விலகி உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு இன்று மும்பையில் கூடி 30 பேர் அடங்கிய இந்திய அணியை தேர்வு செய்துள்ளது. அதில் வீரேந்திர ேவாக், இரஃபான் பத்தான், மொஹம்மது கைய்ஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த சில போட்டிகளில் அணியில் இடம்பெற்றாமல் இருந்த சுரேஷ் ரெய்னா, முனஃப் பட்டேல் ஆகியோர் இருபதுக்கு20 உலக கோப்பைக்கான உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளனர். இரஃபான பத்தானின் சகோதரர் யூசஃப் பத்தான் இடம் பிடித்துள்ளார்.

குஜராத் பேட்ஸ்மேன் நரஜ் பாட்டீல், பஞ்சாப் பன்முக ஆட்டக்காரர் அபிஷேக், ஒரிசா வீரர் நிரஞ்சன், உத்திர பிரதேச வீரர் பர்வீன் குமார் ஆகியோரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

போட்டியில் பங்கேற்கும் இறுதி அணி அடுத்த மாதம் 6 அல்லது 7 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் சங்க செயலர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil