Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரஹாம் ஃபோர்ட் புதிய பயிற்சியாளர்

Advertiesment
கிரஹாம் ஃபோர்ட் புதிய பயிற்சியாளர்

Webdunia

, ஞாயிறு, 10 ஜூன் 2007 (12:46 IST)
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த கிரஹாம் ஃபோர்ட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

சென்னையில் நேற்று இரவு கூடிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்புக் குழு, பயிற்சியாளர் பொறுப்பிற்கு போட்டியிட்ட இங்கிலாந்தின் ஜான் எம்பியூரே, கிரஹாம் ஃபோர்ட் ஆகிய இருவரையும் அழைத்து அவர்களுடைய திட்டங்கள் குறித்து விளக்கங்களைப் பெற்றது.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொருளாளர் என். சீனிவாசன், "இந்திய அணியை பயிற்றுவிக்கும் பொறுப்பிற்கு கிரஹாம் ஃபோர்டை தேர்வு செய்துள்ளது" என்று கூறினார்.

கிரஹாம் ஃபோர்டின் நியமனத்தை வரும் 12 ஆம் தேதி டெல்லியில் கூடும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு உறுதி செய்யும் என்று சீனிவாசன் கூறினார்.

சென்னையில் உள்ள பார்க் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் நடந்த பயிற்சியாளர்கள் தேர்வு கூட்டத்தில் வாரியத் தலைவர் சரத்பவார், செயலர் நிரஞ்சன் ஷா, நிர்வாகிகள் ரத்னாகர் ஷெட்டி, ரவீந்தர் பாண்டோ, இந்திய அணி முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், வெங்கடராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil