இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜான் எம்பியூரே 2வது போட்டியாளராக களத்தில் குதித்துள்ளார்!
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த கிரஹாம் ஃபோர்ட் இந்திய அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து தற்பொழுது ஜான் எம்பியூரேவும் விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து, இவர்கள் இருவரில் ஒருவர் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள கிரிக்கெட் வாரியத்தின் சிறப்புக் குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவர்.
ஜான் எம்பியூரே 54 வயதானவர். இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 147 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், பேட்டிங்கில் 1,713 ரன்களை எடுத்துள்ளவர்.
61 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 76 விக்கெடடுகளை வீழ்த்தியுள்ள எம்பியூரே 1978 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் இங்கிலாந்திற்காக ஆடியவர்.