Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியை வேவு பார்க்கிறது US server :இந்தியா அதிர்ச்சி

Advertiesment
டெல்லியை வேவு பார்க்கிறது US server :இந்தியா அதிர்ச்சி
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (13:02 IST)
அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய இணையதள உளவுத் திட்டத்துக்கு, உலக முழுவதும் 150 இடங்களில் 700 ரகசிய சேர்வர்களை நிறுவியுள்ளது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அதில் ஒன்று இந்தியாவில் நிறுவப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த உளவுத் திட்டம் அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் வாயிலாக தெரிய வந்தது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) மூலம் நடத்தப்படும் எக்ஸ்கீஸ்கோர் என்ற திட்டத்துக்கு அளிக்கப்பட்ட உபகரணங்களில், உளவு கம்ப்யூட்டர் சேர்வர்கள் எங்கெங்கு நிறுவப்பட்டுள்ளன என்ற விபரங்கள் அடங்கிய வரைபடமும் அடங்கும். மேலும்

அந்த சேர்வர்களில் ஒன்று டெல்லி அருகே நிறுவப்பட்டிருப்பது வரைபடத்தில் காணப்பட்டது.இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியதும், எந்தவொரு நாட்டையும் உளவு பார்க்க இந்த சேர்வரை பயன்படுத்தவில்லை.

எங்களது உளவு நிறுவனம் பன்னாட்டு உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை சிறப்பாக அறிந்து கொள்ளவும், பயங்கரவாதிகளின் இலக்குகளை அறிந்துகொள்ளவும் இந்த உபகரணத்தை பயன்படுத்தியதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil