Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்களின் சாதனையை தாங்களே முறியடித்த திரிபுரா மக்கள்

Advertiesment
தங்களின் சாதனையை தாங்களே முறியடித்த திரிபுரா மக்கள்
, வெள்ளி, 15 பிப்ரவரி 2013 (12:32 IST)
FILE
திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த வாக்கு பதிவு சதவீதம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாகும்.

திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சி மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த 249 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

இந்தத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. மொத்தம் 3,041 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 18 ஆயிரம் ஊழியர்கள் வாக்குப்பதிவில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்வதற்காக காலை முதலே வரிசையில் நின்று காத்திருந்தனர். மொத்தம் உள்ள 23.5 லட்சம் வாக்குகளில் 93 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜிண்டால் தெரிவித்தார்.

இந்த வாக்குகள் 28-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. திரிபுராவில் 2008 இல் நடந்த தேர்தலில் 92 சதவீத வாக்குகள் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil